சிலரின் தற்காலிக திருப்திக்காக ஐ.தே.கவை பணயக்கைதியாக்க இடமளிக்க முடியாது - ரவி கருணாநாயக்க 

27 Dec, 2024 | 06:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டுக்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்ட ஐக்கிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக்க இடமளிக்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய செயலாளரும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக நானே இருக்கிறேன். 

பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் பெரும்பான்மையானவர்கள் என்னுடனே இருக்கின்றனர் என்பது ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் அனைவரும் தெரிந்த விடயம். என்றாலும் கட்சியில் இருக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் இந்த கட்சியை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி என்பது மக்களின் கட்சி. இதனை பாதுகாக்க வேண்டும். இதில் இருந்த பலர் தற்போது வெளியில் சென்றாலும் அவர்களை நாங்கள் மீண்டும் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும். ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக இடமளிக்க முடியாது. எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது ஐக்கிய தேசிய கட்சியாகும்.

அதனால் அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். நாட்டில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தது ஐக்கிய தேசிய கட்சியாகும். 

நாட்டில் இருக்கும் மிகவும் பழைமை வாய்ந்த, நாட்டுக்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்ட இந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு செயற்படுவதால், அதன் பாதிப்பு எங்களுக்கே ஏற்படும்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தூரமாகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் தலைதூக்கச் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17