எம்மில் சிலர் பேசும்போது திடீரென்று பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். சிலருக்கு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக முகத்தில் உள்ள தாடை பகுதிகளில் விவரிக்க இயலாத வலி ஏற்படும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் டெம்போரோமாண்டிபுலர் மூட்டு கோளாறு என விவரிக்கிறார்கள். இதனை ஓர்த்தோக்னாதிக் சத்திர சிகிச்சை மூலம் சீரமைக்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிலர் கடினமான உணவு பொருட்களை கடிக்கும் போது அசௌகரியத்தை உணர்வார்கள். இதேபோல் உணவு பொருளை வாயில் மெல்லுவது, விழுங்குவது போன்ற செயலை மேற்கொள்ளும் போதும் அசௌகரியம் நீளும். பேசுவதில் குளறுபடி அதாவது பேச்சில் தெளிவின்மை, பற்களின் தேய்மானம், உடைந்த பற்கள், இதனால் சீராக இயல்பான முறையில் உணவு பொருட்களை கடிக்க முடியாத நிலை, தாடைகளை மூடுவதிலும், திறப்பதிலும் குறைபாடு, உதடுகளை முழுமையாக மூடிக் கொள்வதில் தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படக்கூடும். குறிப்பாக சிலருக்கு தாடையில் வலி உண்டாகும். இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அதாவது தாடை மறு சீரமைப்பு சத்திர சிகிச்சை மூலம் நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
மேலும் சிலருக்கு பிறவியிலேயே தாடை பகுதி இயல்பான வளர்ச்சியை பெறாமல் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பெண்களாக இருந்தால் 14 வயது முதல் 16 வயது வரையிலும் , ஆண்களாக இருந்தால் 17 வயது முதல் 21 வயதிலும் அவர்களுடைய தாடை வளர்ச்சி என்பது நிறைவடைந்த பிறகு தாடை மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
தாடையில் உள்ள மூட்டு பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் வலியும், வீக்கமும் உண்டானால் வைத்தியர்கள் எக்ஸ்ரே உள்ளிட்ட பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து தாடை மறுசீரமைப்பு சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.
அதிகபட்சமாக இரண்டு மணி தியாலம் வரை நீடிக்கும். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு அவர்களுடைய தாடையின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய மாற்றம் அவர்களுக்கு உளவியல் ரீதியாக வலிமையை வழங்கி அவர்களின் மனித ஆற்றலை மேம்படுத்துகிறது. மேலும் இத்தகைய நவீன சத்திர சிகிச்சையின் போது மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் பக்க விளைவுகள் என்பது மிக மிக குறைவாகவே ஏற்படுகிறது.
மேலும் இத்தகைய சத்தர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடித்தால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் உங்களுடைய தோற்றமும் அதனுடாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தாடை வலிக்கு உரிய முழுமையான நிவாரணமும் கிடைக்கும்.
வைத்தியர் ரீஜா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM