ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தால் சேதமடைந்துள்ள 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மோசூல் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் பழமையான மோசூல் அணை தொடர் உள்நாட்டு கலவரங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், சேதமடைந்துள்ள மோசூல் அணையினை உடனடியாக பராமரிக்க வேண்டும் என கூறி அமெரிக்க அதிபர் ஒபாமா ஈராக் பிரதமர் அபாதியை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அணைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இதனால் 5 இலட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் எனவும் 10 இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அணையை பாதுகாக்கும் பொருட்டு 450 பேர் கொண்ட சிறப்புப்படையினரை இத்தாலி பிரதமர் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.