ரஸ்யாவின் விமானஎதிர்ப்பு ஆயுதம் தாக்கியதன் காரணமாகவே அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது என்பது ஆரம்பகட்ட அறிகுறிகள் மூலம் தெரியவருவதாக அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
விமானத்தின் கறுப்புபெட்டியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகஅஜள் இதன் மூலம் விமானவிபத்திற்கான காரணம் தெரியவரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையிலேயே அமெரிக்க அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜான எயர்லைன்ஸ் விமானத்தின் ஜே2 8243 விமானத்தை ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதம் தாக்கியமைக்கான அறிகுறிகள் உள்ளன என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
38 பேரை பலிகொண்ட இந்த விமானவிபத்து குறித்து அமெரிக்கா முதல்தடவையாக தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது மதிப்பீடு உறுதியானால் இது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் அல்லது தாக்குதலாக அமையலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்,
ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம்ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார்.
அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM