பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய கணவனும் 43 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான கணவன் நேற்றைய தினம் பிற்பகல் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் மனைவி தனது 14 வயதுடைய மகனுடன் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் பல கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களினால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM