பயங்கரவாத தாக்குதல் காரணமாகவே செவ்வாய்கிழமை மத்தியதரை கடலில் ரஸ்யாவின் சரக்குகப்பல் கடலில் மூழ்கியது என அந்த கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடைப்பட்ட கடல்பரப்பில்பயணித்துக்கொண்டிருந்தவேளை வெடிப்புசம்பவம் காரணமாக ரஸ்யாவின் உர்சா மேஜர் கடலில் மூழ்கியது. இதன் காரணமாக கப்பல் பணியாளர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
இந்த கப்பல் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புபட்ட ஒபரொனொலொஜிஸ்டிகா என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. கப்பலின் வலது பக்கத்தில் இடம்பெற்ற மூன்று வெடிப்புகள் காரணமாக கப்பல் கடலில் மூழ்கியது இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம் இதற்கு யார் காரணம் என்பதை தெரிவிக்கவில்லை.
உர்சா மேஜர் கப்பலின் உரிமையாளருக்கு ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் உள்ள தொடர்புகள் காரணமாக 2022 இல் அமெரிக்கா இந்த கப்பலிற்கும் உரிமையாளருக்கும் எதிராக தடைகளை விதித்திருந்தது.
கப்பல் பணியாளர்கள் 16 பேரில் 14 பேரை மீட்டு ஸ்பெயினிற்கு கொண்டுவந்துள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெடிவிபத்திற்கு என்ன காரணம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM