குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றின் பின்புறத்திலிருந்த சக்கரமொன்று திடீரென கழன்று வீழ்ந்ததில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த மூன்று நபர்களும் வேனின் சாரதியும் படுகாயமடைந்துள்ள நிலையில் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருமாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM