யேமன் தலைநகர் சனாவை இலக்குவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டவேளை உலகசுகாதார ஸ்தாபனத்தின் டெட்ரோஸ் அடானம் கெப்ரயோசெஸ் சனாவின் சர்வதேச விமானநிலையத்திலிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் விமானத்தில் ஏறவிருந்தவேளை தாக்குதல் இடம்பெற்றது என உலகசுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டுள்ள ஐநாவின் பணியாளர்களின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகளிற்காகவும் யேமனின் சுகாதார மனிதாபிமான நிலையையும் ஆராய்வதற்காக நான் அந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன் என அவர்தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமும்,பயணிகள் புறப்படும் பகுதியும் விமானஓடுபாதையும் சேதமடைந்துள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஓடுபாதையிலிருந்து சில மீற்றர் தொலைவிலிருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானநிலைய ஒடுபாதைதிருத்தப்பட்ட பின்னரே நாங்கள் யேமனிலிருந்து புறப்படமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM