கத்தார் எயர்வேயிஸிற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விமானத்தில்உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் ஈராக்கின் குர்திஸ் பிரதேசமான எர்பிலில் நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 81 வயது பெண்ணிற்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் விமானம் எர்பில் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.குர்திஸ் தலைநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குர்திஸ்தான் அதிகாரிகள் தங்களை தொடர்புகொண்டு டோஹாவிலிருந்து பாரிசிற்கு சென்று கொண்டிருந்த விமானத்திலிருந்தஇலங்கை பெண் உயிரிழந்துள்ளார் என அறிவித்தனர் என எர்பிலிற்கான இலங்கையின் துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்குள் அவசர நிலை உருவானது, இதனை தொடர்ந்து விமானி எபில் விமானநிலையத்தில் அவசர தரையிறங்குவதற்கான வேண்டுகோளை விடுத்தார், என தெரிவித்துள்ள இலங்கையின் துணை தூதரக அதிகாரிகள் உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக மருத்துவ குழுவினர் காத்திருந்தனர் ஆனால் அந்த பெண் விமானத்திலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் வசித்த 81 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார், இலங்கைதூதரக அதிகாரிகள் மகனை தொடர்புகொண்டுள்ளனர் பிரான்ஸ் பிரஜையான அவர் தனது தாயின் உடலை பிரான்சிற்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை வழங்குமாறு குர்திஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM