முந்தல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை - சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 7

27 Dec, 2024 | 09:02 AM
image

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (26) கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கும்புறுமுல, யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த  44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இறால் பண்ணையில் வேலை செய்துவருவதுடன், சிலருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது தனிப்பட்ட முரண்பாடு காரணமாக  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ, பலாகல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21