எம்மில் பலரும் அவர்களது ஜாதகம் சிறப்பானதாக இருந்தாலும் திசா புத்தியும், அந்தரமும் சாதகமானதாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு சுப பலன்கள் கிடைப்பதில்லை. இந்தத் தருணத்தில் எம்முடைய ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக முன்னோர்களும் வார சூனியம் குறித்து விவரித்து அதனால் உங்களது ஜாதகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதனை ஆய்வு செய்து, அதற்குரிய பரிகாரத்தையும் முன்மொழிந்து இருக்கிறார்கள்.
எம்மில் பலருக்கும் திதி சூனியம் என்பது தெரியும். அது என்ன வார சூன்யம்? என புதிதாக ஆச்சரியத்துடன் வினா எழுப்புவார்கள். நீங்கள் பிறந்த திகதியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் கிரகங்கள் இடம் பெற்று திசை நடத்தினால் அந்த திசா நாதன்- புத்தி நாதன் -அந்தரம் -ஆகியவை சுப பலன்களை வழங்குவதில்லை.
இவை பாரிய தடையையும், இடையூறையும் ஏற்படுத்துகிறது என கண்டறிந்து அதற்கான பரிகாரத்தையும் விவரித்து இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து நீங்கள் எந்த கிழமையில் பிறந்திருக்கிறீர்கள் ?என்பதையும், அந்த கிழமையில் எந்த நட்சத்திரத்தில் உள்ள திசா நாதன் சுப பலன்கள் வழங்குவதில்லை என்ற பட்டியலையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து கீழே காண்போம்.
ஞாயிறு கிழமை - பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் ,அனுஷம், கேட்டை, பூரட்டாதி இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் கிரகம் இருந்து அந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்றால் அந்த கிரகம் சுப பலன்களை வழங்குவதில்லை.
திங்கட்கிழமை - கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரட்டாதி, பூராடம் ஆகிய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் ஏதேனும் ஒன்றில் கிரகம் இருந்து அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் அந்த கிரகம் வழங்க வேண்டிய சுப பலன்கள் தருவதில்லை.
செவ்வாய்க்கிழமை - திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம் இந்த நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்து அவற்றின் திசை நடந்தால் அவை சுப பலன்களை வழங்குவதில்லை.
புதன்கிழமை - அசுவினி, பரணி, கிருத்திகை, மூலம் , திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்தால் அவற்றின் திசை நடக்கும் போது அல்லது அவற்றின் அந்தரங்கள் நடக்கும் போது பலன் தருவதில்லை.
வியாழக்கிழமை - மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்து அவற்றின் தசை நடைபெற்றால் அவை சுப பலன்களை வழங்குவதில்லை.
வெள்ளிக்கிழமை - ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், ஹஸ்தம், அனுஷம் , அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்து அவை திசை நடத்தினால் சுப பலன்களை வழங்குவதில்லை.
சனிக்கிழமை - புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்து அவற்றின் திசை நடைபெற்றால் அவை சுப பலன்களை வழங்குவதில்லை.
இதன் காரணமாக வார சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பிறந்த நாளில் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது பிறந்த நாம யோகத்தில் பரிகாரம் செய்ய வேண்டும்.
இதற்கு தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் சிவாலயத்திற்கு நேரில் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
இங்குள்ள குப்த கங்கை எனும் குளத்தில் நீராட வேண்டும். அதன் பிறகு அங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் எம தர்மனுக்கு இலுப்பை எண்ணெய் மற்றும் தாமரை தண்டு திரியை வைத்து விளக்கேற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து 'வார சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு அருள் புரிய வேண்டும் 'என பிரார்த்திக்க வேண்டும்.
அதன் பின்னர் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கி, கடந்த பிறவி கர்மாவை நீக்கி, இந்த பிறவியில் செல்வ வளம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில் இருக்கும் சதுரபதி எனும் இடத்திற்கு அருகே உள்ள சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள பித்ரு லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் செய்து வணங்கிட வேண்டும்.
இங்கும் இலுப்பை எண்ணெய் மற்றும் தாமரைத் தண்டு திரியால் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனைத் தொடர்ந்து இங்குள்ள சிவபெருமானையும், பார்வதியையும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
இதன்பிறகு இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய செல்வ வளம் கிடைப்பதற்காக திருமீயெச்சூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்திற்கும் லலிதாம்பிகையும் வணங்க வேண்டும். இங்கும் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இலுப்பை எண்ணெய் மற்றும் தாமரைத் தண்டு திரியால் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அருகருகே அமையப்பெற்றிருக்கும் இந்த மூன்று ஆலயத்திற்கும் சென்று பிரத்யேகமான வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய கடந்த பிறவி பாவங்களும் அதன் மூலமாக இந்த பிறவியில் கிடைத்த கர்மாவும் நீங்கி, இந்தப் பிறவியில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்க இயலும்.
கொழும்பிலிருந்து ஆகாய மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும். அதன் பிறகு திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் எனும் ஊருக்கு சாலை மார்க்கமாகவோ அல்லது பேருந்திலோ செல்ல வேண்டும்.
அங்கு சிவபெருமானை தரிசித்த பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ அல்லது பேருந்து மார்க்கமாகவோ சதுரபதி மற்றும் திருமீயெச்சூர் சென்று இறைவனை வழிபடலாம். இந்த தரிசனத்தை நிறைவு செய்த 48 நாட்களில் உங்களது வாழ்க்கையில் மாற்றம் வருவதை நீங்கள் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM