அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடா முயற்சி' படத்தில் தன் பங்களிப்பை அஜித்குமார் நிறைவு செய்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக இருக்கும் ' விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசண்ட்ரா, ஆரவ் , நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் நாளை (டிசம்பர் 27 ) வெளியாகிறது.
அதற்கு முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பை அண்மையில் நிறைவு செய்த அஜித்குமார் - படத்திற்கான பின்னணி குரல் வழங்கும் பணியையும் நிறைவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்திற்கான தன்னுடைய பங்களிப்பை முழுமையாக அஜித்குமார் நிறைவு செய்திருக்கிறார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழு அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இது அஜித் ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இதனிடையே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியாகாது என்றும், ஜனவரி 26 ஆம் திகதி வெளியாக கூடும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM