(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் கடந்த அரசாங்கம் 99 சதவீத இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் மிகுதி 1 சதவீதமான பணிகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மறுசீரமைத்தால் கடன் மறுசீரமைப்பு இழுபறிக்குள்ளாகும். அது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும்.கடந்த அரசாங்கத்தின் தீர்மானங்களை தொடரவேண்டிய கட்டாயம் காணப்படுகிறது என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம். சர்வதேச பிணைமுறியாளர்களுடனான ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாட்டு கடன் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடன் மறுசீரமைப்பு பணிகளை நாணய நிதியம் முன்னெடுக்காது. அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும்.இருதரப்பு மற்றும் பிணைமுறி கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட 5.8 பில்லியன் டொலர், சீன எக்சிம் வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட 4.2 பில்லியன் டொலர், சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 3.3 பில்லியன் டொலர், பிணைமுறியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட 2 பில்லியன் டொலர் உள்ளிட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு கடந்த அரசாங்கம் 2024.09.19 ஆம் திகதி இணக்கப்பாடு எட்டியுள்ளது.
சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு கடந்த அரசாங்கம் 99 சதவீத இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் மிகுதி 1 சதவீதமான கடன் மறுசீரமைப்புக்கான பணிகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
குவைட், சவூதி அரேபியா, ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட 300 மில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைளையே மேற்கொள்ள வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. புதிதாக திட்டங்களை செயற்படுத்தினால் கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்குள்ளாக்கும். அது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும். இதற்கமைய 2024.12.20ஆம் திகதியன்று சர்வதேச பிணைமுறியாளர்களுடன் பரிமாற்றல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உரிய திட்டங்கள் சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையில் அரச சேவையாளர்களுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். பொருளாதார மீட்சியின் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக பெற்றுக் கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM