20ஆவது ஆண்டு சுனாமி நினைவுகூரலை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று (26) காலை 9 மணியளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது.
நினைவுத்தூபி திறப்பு நிகழ்வில் 2004.12.26 அன்று இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிரிழந்தவர்களுக்கான நினைவாஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்களும் நடைபெற்றன.
மேலும், இதன்போது இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நினைவேந்தலுக்கு முதன்மை அழைப்பாளராக மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டார்.
அத்துடன் அரச நிறுவன பணிப்பாளர்கள், சமூக நிறுவன உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்திருந்தனர்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கின் புத்தாக்கமான சமூகவியல் செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது.
குறிப்பாக இலக்கியம், சமூக அபிவிருத்தி மற்றும் சகவாழ்வு தொடர்பாக மக்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களை சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தி அரச நிறுவனத்தினது சமூகம் சார்ந்த இயங்கியலை உறுதி செய்து வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM