தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 30 தொன் டொலமைட் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புதன்கிழமை (25) பிற்பகல் கஹதுடுவ நுழைவாயிலின் 6 கிலோ மீற்றர் மைல்கல்லுக்கு அருகில் மேற்படி விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி கட்டுபாட்டை இழந்து பாதுகாப்பு வேலியின் மீது மோதி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் பதிவாகவில்லை எனவும் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான லொறி 50 கிலோ கிராம் எடையுடைய சுமார் 600 டொலமைட் மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன், விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்த நிலையில் லொறி மூன்று முறை உருண்டு சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அத்தோடு வாகனத்தைச் செலுத்திய சாரதி மூன்று நாட்களாக நித்திரைக் கொள்ளவில்லை எனவும், வாகனம் செலுத்தும் போது ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தில் கட்டுபாட்டை இழந்த லொறி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM