கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது
25ஆம் திகதி புதன்கிழமை இரவு 7 மணியளவில் டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுக் குழந்தை படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM