(இராஜதுரை ஹஷான்)
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினர் உட்பட ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுமென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற மத வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2024ஆம் ஆண்டு எவ்வாறான நிலைவரத்தின் பின்னணியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகியும் எதனையும் செய்யவில்லை என்று அரசியலில் வங்குரோத்து நிலையடைந்தவர்கள் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் அரச சேவையாளர்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும். அதேபோல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினருக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
2048ஆம் ஆண்டு வரை செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் குறிப்பிடப்போவதில்லை. தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்வுபூர்வமாக எம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
அரச செலவுகளை இயலுமான வகையில் குறைத்து அதன் பயனை நாட்டு மக்களுக்கு ஏதாவதொரு வழியில் வழங்குவோம். மக்களை ஏழ்மை நிலையில் வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை நாட்டு மக்கள் கவனத்திற் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுப் பெற்ற ஜனாதிபதிகளுக்கு மாத்திரம் சிறப்பு சலுகை வழங்குவதற்கு கோடி கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM