எம்மில் பலரும் நாளாந்தம் அவர்களுடைய பூஜை அறையில் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருப்பர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் இறை வழிபாட்டினை மேற்கொண்டு இருப்பார்கள்.
ஆனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வருடம் முழுவதும் இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவார்கள்.
ஆனால் நடைமுறையில் அது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை. இந்நிலையில் தமிழ் மாதங்களில் தனுர் மாதம் என்றும் மார்கழி மாதம் என்றும் குறிப்பிடப்படும் இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் இறை வழிபாட்டை மேற்கொண்டால்... ஆண்டு முழுவதும் அல்ல ஆயுள் முழுவதும் இந்த பிறவியில் எமக்கு தேவையான அனைத்து சுபிட்சங்களையும் பெறலாம் என குறிப்பிடுகிறார்கள்.
'மாதங்களில் நான் மார்கழி' என கிருஷ்ண பரமாத்மா குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள்.. மார்கழி மாதத்தில் பிரத்யேகமான முறையில் இறை வழிபாட்டில் ஈடுபட்டால் இந்த பிறவியில் நீங்கள் பெறவேண்டிய அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு , நாட்டு சர்க்கரை, மூன்று மாசிக்காய் பச்சை அல்லது மஞ்சள் வண்ண சதுர வடிவிலான துணி.
மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாசலை தெளித்து கோலம் போடும் முன் வாசலில் பச்சரிசி மாவினையும் , நாட்டு சர்க்கரையையும் கலந்தோ அல்லது தனித்தனியாகவோ வாசலில் வைக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பச்சை அல்லது மஞ்சள் வண்ண சதுர வடிவிலான துணியை எடுத்து அதில் மூன்று மாசிக்காயை வைத்து முடிச்சிட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
இதன் பிறகு நீங்கள் இறைவழிபாட்டை மேற்கொண்டு உங்களுடைய கோரிக்கைகளை இறைவன் முன் பிரார்த்தனையாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து மாசிக்காயை உங்களுடைய பணப்பெட்டிக்குள் வைத்து விடுங்கள். இதனால் தன வருவாய் தங்கு தடை இன்றி வருவதுடன் அனைத்து செல்வ செல்வ வளங்களும் கிடைப்பதை அனுபவத்தில் காண்பீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM