ஹெய்ட்டியில் ஆயுததாரிகள் அரசாங்க மருத்துவமனையொன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெய்ட்டியின் மிகப்பெரிய அரசமருத்துவமனையை மீண்டும் திறக்கும் நிகழ்வின் போது இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சரின் வருகைக்காக பத்திரிகையாளர்கள் காத்திருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பத்திரிகையாளர்களும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது பயங்கரமான திரைப்படம் போல காணப்பட்டது என இந்த வன்முறையை நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் ஹெய்ட்டி டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பலர் பத்திரிகையாளர்களின் இரத்தங்கள் எனது ஆடையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
விவ் அன்சாம் குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளியே காயமடைந்த பலர் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இந்த பகுதியை ஆயுதகுழுக்களிடமிருந்து கடந்த ஜூலையில் அரசாங்க படையினர் கைப்பற்றியிருந்தனர்.
ஏப்பிரலில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டு சர்வதேச படையணியொன்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களின் வன்முறைகள் தொடர்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM