(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுவை மீளப் பெறுவதற்கான தீர்மானத்துக்கு கடந்த 3ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தேர்தல் முறைமையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM