பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025

Published By: Vishnu

25 Dec, 2024 | 12:08 AM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கெங்கு, என்னென்ன திகதிகளில் நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடத்தப்படும் எனவும் இப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு என்ற உரிமையை பாகிஸ்தான் கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017க்குப் பின்னர் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சர்வதேச அரங்கில் அரங்கேற்றப்படவுள்ளது. இந்தியா, இலங்கை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து 1996 உலகக் கிண்ணப் போட்டியை நடத்திய பாகிஸ்தானில், 28 வருடங்கள் கழித்து முதல் தடவையாக ஐசிசி போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

2017இல் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண போட்டி முறைமையே 2025இலும் பின்பற்றப்படவுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 8 அணிகள் இரண்டு குழுக்களாக வகுப்பட்டு முதல் சுற்ற லீக் முறையில் நடத்தப்படும்.

கடைசியாக ஐக்கிய இராச்சியத்தில் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2017 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான  பாகிஸ்தான், இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்தியா ஆகியவற்றுடன் நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகியன ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

இந்தியா அரை இறுதிக்கு முன்னேறினால் அப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும். அத்துடன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதிபெற்றால் அப் போட்டியும் துபாயிலேயே நடைபெறும். ஒருவேளை இந்தியா தகுதிபெறாவிட்டால் அப் போட்டிகள் பாகிஸ்தானில் அரங்கேற்றப்படும்.

இந்தியா சம்பந்தப்படாத போட்டிகள் யாவும் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்ததை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நடுநிலையான இடமாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி உட்பட 2027வரை இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்குபற்றினால் அதன் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் நிலவுவதால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த பல்லாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

ஏ குழு

பெப். 19: பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து (லாகூர்)

பெப். 20 பங்களாதேஷ் எதிர் இந்தியா (துபாய்)

பெப். 23: பாகிஸ்தான் எதிர் இந்தியா (துபாய்)

பெப். 24: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து (ராவல்பிண்டி)

பெப். 27: பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் (ராவல்பிண்டி)

மார்ச் 2: நியூஸிலாந்து எதிர் இந்தியா (துபாய்)

பி குழு

பெப்: 21: ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா (கராச்சி)

பெப். 22: அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (லாகூர்)

பெப். 25: அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா (ராவல்பிண்டி)

பெப்; 26: ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து (லாகூர்)

பெப். 28: ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா (லாகூர்)

மார்ச் 1: தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து (கராச்சி)

அரை இறுதிகள்

மார்ச் 4: ஏ1 எதிர் பி2 (துபாய்)

மார்ச் 5: பி1 எதிர் ஏ2 (லாகூர்)

இறுதிப் போட்டி

மார்ச் 9 லாகூர் (அல்லது துபாய்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33