இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைப்பு

Published By: Vishnu

24 Dec, 2024 | 08:57 PM
image

கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அது தற்போதைய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவின் பிரகாரம் ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாகக் கூறி அதன் தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை ஆரம்பித்தன.

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடமையை செய்யாமல் தவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் அறுபத்திரண்டு ஊழியர்களின் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் விசேட உத்தரவின் பேரில் அந்த ஊழியர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, இழந்த சலுகைகள் மற்றும் தண்டனைகள் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (24) எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09
news-image

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண...

2026-07-14 18:24:37
news-image

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள் குறித்து இணைந்த...

2026-07-14 15:30:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்: 287...

2026-07-14 20:03:09
news-image

சாணக்கியன் முன்வைத்த பிரேரணையை ஏற்றால் மாகாணசபைத்...

2026-07-14 14:27:52
news-image

ஜனாதிபதியின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு :...

2026-07-14 18:26:20
news-image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா...

2026-07-14 19:20:56
news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30