தங்கு தடையின்றி செல்வ வளம் வழங்கும் தாமரை மலர் வழிபாடு

Published By: Digital Desk 7

24 Dec, 2024 | 08:14 PM
image

எம்மில் பலரும் பணத்தைத் தேடித் தான் நாளாந்தம் பயணப்படுகிறோம். பணம் இருந்தால் தான் எம்முடைய மனமும், உடலும் உற்சாகமடைந்து ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பணம் இருந்தால் தான் நான்கு பேருக்கு உதவவும் முடியும். பணம் இருந்தால் தான் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்க முடியும்.  பணம் இருந்தால் தான் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு கல்வி தொடர்பாகவும், ஆரோக்கியம் தொடர்பாகவும் நிதி உதவி செய்ய முடியும்.

பணம் இருந்தால் தான் ஆலயத்தில் உள்ள ஆண்டவனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்ய இயலும். பணம் இருந்தால் தான்  என இப்படி பல விடயங்களை தொடர்ச்சியாக பட்டியலிடலாம். ஆக இன்றைய நவீன காலகட்டத்தில் பணம் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது. எம்மில் சிலருக்கு நாளாந்தம் கடுமையாக உழைத்தாலும் ஒரு எல்லைக்கு மேல் தன வரவு என்பது வருவதில்லை.

சிலருக்கு மட்டும் கடுமையாக உழைத்தாலும் உழைக்காவிட்டாலும் தன வரவு என்பது சீராக இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உங்களுக்கு தன வரவு தங்கு தடை இன்றி வரவேண்டும் என்றால் எளிய முறையில் வழிபாட்டை மேற்கொண்டால் சாத்தியம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : வெண்தாமரை -சிவப்பு வண்ண தாமரை, கஸ்தூரி மஞ்சள் தூள், மஞ்சள் பொடி , வாசனை மிக்க தாழம்பூ குங்குமம்,  பச்சை கற்பூரம்.

பெண் தாமரையையும், சிவப்பு வண்ண தாமரையையும் மலர் அங்காடியில் இருந்து வாங்கி வந்து அதனை ஒரு மிகப்பெரிய தாம்பாளத்தில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்த நீருக்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த வெண் தாமரை மற்றும் சிவப்பு வண்ண தாமரை மீது மஞ்சள் தூள் +குங்குமம்+ பச்சைக் கற்பூரம்+  ஆகியவற்றின் கலவையை 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி' என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து அவற்றின் மீது அர்ச்சிக்க வேண்டும்.‌

இதனை ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களது பூஜை அறையில் மேற்கொண்டால் உங்களுடைய தனவரவு என்பது தங்கு தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.

இந்த தாமரை பூக்களை நாளாந்தம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 27 நாட்கள் இப்படி பிரத்யேகமாக தாமரை பூக்களை வைத்து அர்ச்சித்தால் உங்களுடைய தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் அதாவது தன வரவு என்பது தங்கு தடையில்லாமல் வருவதை அனுபவத்தில் காணலாம்.

தாமரை இலை நீரில் இருப்பதால் அந்த நீர் புனித நீராக மாற்றம் பெறுகிறது. அதனால் அந்த நீரை வீணடிக்காமல் உங்கள் வீடு முழுவதும் தெளிக்கலாம்.

வாடிய தாமரை இலையை மற்றவர்களின் பாதம் படாத இடத்தில் விட்டு விடலாம்.  இப்படி மேற்கொள்ளும் போது உங்களுடைய தன வரவில் மாற்றம் ஏற்படுவதையும் அவை தொடர்ச்சியானதாகவும், நிலையானதாகவும், வளர்ச்சி அடையக்கூடியதாகவும், உங்களுடைய தனவரவு இருப்பதையும் அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14