(எம்.வை.எம்.சியாம்)
பிணையில் விடுவிக்கப்பட்ட சலிந்து மல்ஷிக குணரத்ன எனும் பாணந்துறை 'குடு சலிந்து'வை மீண்டும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை மேல் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிணை நிபந்தனை மீறிய காரணத்தினால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு திங்கட்கிழமை (23) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார.
பயங்கரவாத செயல்கள் மற்றும் கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த சலிந்து மல்ஷிக குணரத்ன எனும் பாணந்துறை 'குடு சலிந்து கடந்த 2023 மார்ச் 07 ஆம் திகதி மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டதுடன் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சுமார் 362 நாட்கள் சி.ஐ.டி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடு சலிந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த 20 ஆம் திகதி மீண்டும் பாணந்துறை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அதற்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு கடுமையான பிணை நிபந்தனைகளும் வழங்கப்பட்டன.
அவர் ஒவ்வொரு மாதமும் வாரத்தில் இரண்டாவது அல்லது நான்காவது நாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது மக்கள் முறைப்பாட்டுப்பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவ்வாறு முன்னிலையாகவில்லையாயின் அவரது பிணை இரத்து செய்யப்பட்டு இந்த வழக்கு முடிவடையும் வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே மொரட்டுவை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட வழக்கொன்றில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நிபந்தனை விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 'குடு சலிந்து' ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிருக்க வேண்டும்.எனினும் அவர் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பாணந்துறை மேல் நீதிமன்றத்திலும்' மொரட்டுவை நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்பித்தனர்.
இதன் போது அதிகாரிகள் மன்றில் சந்தேகநபர் பிணை நிபந்தனையை மீறியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப் படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பிக்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.
எனினும் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி 'குடு சலிந்து' பிணை நிபந்தனை மீறியுள்ளமையால் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 'குடு சலிந்து' பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM