ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது

24 Dec, 2024 | 03:44 PM
image

சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி,  இலக்கம் 134 ஸ்டேஷன் வீதி, ஹோமாகம அதன் 53வது கிளையை வைபவ ரீதியாக அண்மையில் திறந்து வைத்தது.

இலங்கை முழுவதும் உள்ள  வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் தற்போதைய பணியில் மற்றொரு மைல்கல்லாக இந்த மாபெரும் திறப்பு விழா அமைந்தது.

இந்நிகழ்வில் சியபத பினான்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர், ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி .ரஜீவ் டி சில்வா, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், உள்ளூராட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன், ASP - ஹோமாகம, . ஹசங்க ரந்திக வெதமுல்ல, பதில் OIC- ஹோமாகம, . பிரியஷாந்த, வர்த்தக சங்கத்தின் தலைவர், மாகம்மன மகா வித்தியாலய அதிபர் கே பத்மலதா, ஆகியோர் கலந்துகொண்டடதுடன் பிரதேசத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களும் பங்குகொண்டன.

ஹோமாகம கிளையானது குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகள், தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு சேவைகள், காரணியாக்கம் மற்றும் Smart Pay தானியங்கு பில் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு வகையான நிதித் தயாரிப்புகளை வழங்குகிறது. ஹோமாகம பகுதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், உள்;ர் சமூகத்தின் நிதி அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கின்றன.

ஏறக்குறைய 137 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், இலங்கையில் உள்ள பிரதேச சபைகளினுள் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஹோமாகம, வேகமாக வளர்ந்துவரும் நகரமாகவும் பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க பிரதேசமாகவும் திகழ்கின்றது.

இப்பகுதியானது ஆடைகள், மோட்டார் வாகனங்கள், சொத்து மேம்பாடு மற்றும் வாடகை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிகங்களினால் வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), அத்துடன் பெரிய நிறுவனங்கள், ஹோமாகமவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.

K Seeds Investments (Pvt) Ltd ஆல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய விரிவான நிதிப் பகுப்பாய்வில், 2024 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் சியபத பினான்ஸ் பிஎல்சி "சிறந்த செயல்திறன் கொண்ட நிதி நிறுவனமாக" தரவரிசை வகை 2 இல் தரப்படுத்தப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு, சியபத பினான்ஸ் 134, ஸ்டேஷன் வீதி, ஹோமாகம என்ற முகவரியில் அல்லது 117605535 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32