இலங்கை தொழில்முனைவோர் சங்கம் (COYLE) பெருமையுடன் வழங்கும் நான் இலங்கைத் தொழில்முனைவோர்களில் ஒருவன் ( IAM the SriLankan Entrepreneur 2024) இது நாட்டின் மிகச் சிறந்த தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒருமதிப்பு மிக்க விருது வழங்கும் நிகழ்வாகும்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதிநடைபெறவுள்ள இந்த விஷேட நிகழ்வானது, இலங்கையின் தொழில்துறைகளை முன்னோக்கி கொண்டு சென்றதுணிச்சலான தூர நோக்கும், புத்தாக்கதிறனும் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் அமையவுள்ளது.
இந்த ஆண்டுக்கானவிருதுகள், இத்தீவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விண்ணப்பிப்பவர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது,மாகாணம் முதல் மாவட்டமட்டஅங்கீகாரம் வரை, இந்தமுயற்சியானது, இலங்கைவர்த்தகத்தின் எதிர்காலத்தைவடிவமைக்கின்றதொழில் முனைவோரின் திறமையைஎடுத்துக்காட்டுகிறது.
சிறந்த இளம் தொழில்முனைவோர், சிறந்த பெண் தொழில்முனைவோர்,சிறந்தச மூகதொழில் முனைவோர் மற்றும் ஆண்டின் சிறந்த தொழில் முனைவோர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 65க்கும் மேற்பட்ட விருதுகளுடன், இந்த நிகழ்வு திறமை மற்றும் சாதனைகளின் எழுச்சியூட்டும் காட்சியாக அமையப்பெறவுள்ளது.
நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் மதிப்பீட்டு செயல்முறையானது இலங்கையின் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன குழுவான எர்னஸ்ட் & யங் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இப்போது COYLE இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உள்ளீடுகள் ஜனவரி 15, 2025 அன்று முடிவடைகிறது, எனவே ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தங்கள் சாதனைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெளிக்கொண்டு வருவதற்காக விரைவாக செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM