பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுதுதப்பட்ட 'கொழும்பு பிரகடனம்' ஜெனிவாவில் நாளை இடம்பெறவுள்ள உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள, உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது மாநாட்டில் இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்குபற்றவுள்ளார்.

குறித்த மாநாட்டின் போது விசேட உரையொன்றையும் அமைச்சர் நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த மாநாட்டை தொடர்ந்து இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்திலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.