25ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சி

Published By: Digital Desk 7

24 Dec, 2024 | 12:03 PM
image

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை (22) ஆரம்பமானது.

நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால்  நத்தார் கரோல் கச்சேரி  நிகழ்த்தப்பட்டது.

நேற்று முன் தினம் நடாத்திய கரோல் இசை நிகழ்ச்சியை   நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நஜித் இந்திக்க, லக்மாலி ஹேமச்சந்திர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டோர்  பார்வையிட்டனர்.

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இரண்டாம் நாளாகவும் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு நேற்று (23) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை  (24) இலங்கை விமானப்படையின் இசை மற்றும் வாத்திய குழு கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைக்கக்கப்படவுள்ளன. 

இந்த கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணி முதல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47