இலங்கையில் முதல்முறை இடம்பெறும் சர்வதேச Faldo கோல்ஃப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் DFCC வங்கி

Published By: Digital Desk 2

24 Dec, 2024 | 11:17 AM
image

சர்வதேச Faldo ஜுனியர் கோல்ஃப் சுற்றுப்போட்டி மற்றும் Pro-Am 2025 நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்கி, தனது வகிபாகம் குறித்து DFCC வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வை முதல்முறையாக நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளதைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமான ஒரு சாதனை மைல்கல்லாக மாறியுள்ளது. 

2025 ஜனவரி 7 முதல் 9 வரை றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தில் இது இடம்பெறவுள்ளது.

ஆறு தடவைகள் Major Champion பட்டத்தை வென்ற புகழ்பூத்த வீரர் சேர் நிக் ஃபால்டோ அவர்களால் 1996ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Faldo Series உலகின் மிகப் பாரிய மற்றும் மிகவும் நன்மதிப்புப் பெற்ற ஜுனியர் கோல்ஃப் போட்டித்தொடராகத் திகழ்ந்து வருகின்றது.ssw.

 பிரதான சுற்றுப்போட்டிக்கு முன்பதாக, 2025 ஜனவரி 5 அன்று Pro-Am போட்டி இடம்பெறவுள்ளது. DFCC Pinnacle வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமான போட்டியானது அடுத்த தலைமுறை கோல்ஃப் திறமைசாலிகளுடன் இணைந்து விளையாடுவதற்கான மறக்க முடியாத வாய்ப்பினை வழங்கி, தோழமை மற்றும் நட்புறவை வளர்த்து, அதிசிறந்த அனுபவத்தை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்