இடியோபதி கார்டியோ மயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

23 Dec, 2024 | 04:37 PM
image

எம்மில் சிலர் உடற்பருமனாகவும், ஒஸ்துமா பாதிப்புடனும் இருப்பர். இவர்களில் பலருக்கும் சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, மூச்சு திணறல் ஏற்படும். 

உடனடியாக நின்று அல்லது அமர்ந்து ஓய்வெடுத்த பிறகு தொடர்ந்து மீண்டும் சில அடி தூரங்கள் வரை நடப்பார்கள். 

இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் இடியோபதி கார்டியோ மையோபதி என குறிப்பிடுகிறார்கள். இதற்கு ஹெட்டோரோடோபிக் இதய மாற்று சத்திர சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணத்தை வைத்திய நிபுணர்கள் அளிக்கிறார்கள்.

சிலருக்கு இதய பாதிப்பு ஏற்படும். இதனை உடனடியாகவோ அல்லது தொடக்க நிலையிலோ கண்டறிந்து சிகிச்சை பெற்றால். 

பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் நிவாரணத்தை பெறலாம். ஆனால் சிலருக்கு அவர்களுடைய உடல் எடை அதிகமாக இருப்பதால் நடப்பதற்கே  சிரமப்படுவர். 

இவர்களுக்கு ஒஸ்துமா பாதிப்பும் இருந்தால்.. நுரையீரலில் உயர் குருதி அழுத்த பாதிப்பும் ஏற்படக்கூடும். இதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். மேலும் இவர்களுக்கு இதய பகுதியில் உள்ள தசைகளும் பலவீனமாகவே இருக்கும்.

இதுபோன்ற பாதிப்பிற்கு உள்ளாகும் நோயாளிகளை வைத்தியர்கள் முழுமையாக பரிசோதித்து அவர்களுக்கு நன்கொடையாக கிடைக்கும் இதயத்தை பலவீனமான இதயம் இடது புறத்தில் இருக்க... கிடைத்த புதிய இதயத்தை வலது புறத்தில் வைத்து அதனை இடது புற இதயத்துடன் இணைத்து விடுவார்கள். 

இதன் மூலம் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் இதயம் வழமையான பணிகளை 80 சதவீதமும் , ஏற்கனவே இருக்கும் இதயத்தின் பணிச் சுமையை குறைத்து 20 சதவீதம் செயல்படுமாறும் இதயத்தின் இயக்கத்தை வைத்திய நிபுணர்கள் மாற்றி அமைப்பர். இதன் பிறகு நோயாளியால் நடக்க முடியும். 

இயல்பான வாழ்விற்கு விரைவாக திரும்ப இயலும். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு ஹெட்டோரோடோபிக் இதய மாற்று சத்திர சிகிச்சை என குறிப்பிடுவார்கள்.  

இத்தகைய சிகிச்சை மிக அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது என்றாலும்.. இத்தகைய இதய மாற்று சத்திர சிகிச்சை மூலம் நோயாளிக்கு வைத்திய நிபுணர்கள் நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

 இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் சத்திர சிகிச்சையின் பலன் முழுமையாக கிடைக்கும்.

வைத்திய ஷெரீஃப் - தொகுப்பு அனுஷா  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45