எம்மில் பலரும் தங்களுக்குத் தெரிந்த தொழிலை நேர்மையாகவும், அறத்துடனும் மேற்கொண்டு வருவார்கள். இவர்களுக்கான வணிகம் என்பது சீராகவும், நிலையானதாகவும் இருக்கும்.
ஆனால் அதில் சிலருக்கு தோல்வியும், நிலையற்ற வருவாயும் இருக்கும். இவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் லாபாதிபதி ஆறு அல்லது எட்டு ஆகிய மறைவிடங்களில் மறைந்து விடுவர்.
இதன் காரணமாக இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான லாபம் கூட கிடைப்பதில்லை. இவர்கள் பல்வேறு பரிகாரங்கள் செய்தாலும் குறைவான பலன்களையே பெறுகிறார்கள். இதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக மந்திர உச்சாடன வழிமுறையை முன்மொழிந்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஒருவரது ஜாதகத்தில் லாப ஸ்தானம் என குறிப்பிடப்படும் பதினோராவது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகங்கள் இல்லாமல் இருந்தாலோ லாபம் தரவேண்டிய கிரகங்கள் ஆறு எட்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டாலோ இவர்கள் வாழ்நாள் முழுவதும் நாளாந்தம் சிவ ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
சிவ ஸ்தோத்திரம் என்பது உங்களுக்கு தெரிந்த எதை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். உங்களுக்கு எந்த சிவ ஸ்தோத்திரமும் தெரியவில்லை என்றால் ... இணையதளத்தில் சிவ ஸ்தோத்திரம் என்ற பெயரினை பதிவிடுங்கள். அதில் கிடைக்கும் சிவ ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
சிவ ஸ்தோத்திரத்தை நாளாந்தம் காலையில் எழுந்ததும் நீராடி பூஜை அறையில் உச்சரித்த பிறகு உங்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் ஒருவருக்காவது தானமோ அல்லது தர்மமோ செய்ய வேண்டும்.
இதனை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய அனைத்து லாபங்களும் விரைவாகவும், நிறைவாகவும் ,முழுமையாகவும் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM