bestweb

சசிகுமார் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்ட 'பயாஸ்கோப்' படத்தின் கிளர்வோட்டம்

Published By: Digital Desk 2

23 Dec, 2024 | 02:46 PM
image

நடிகர் சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ' பயாஸ்கோப் ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர்களான சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

'வெங்காயம் 'எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பயாஸ்கோப் 'எனும் திரைப்படத்தில் சங்ககிரி ராஜ்குமார், மாணிக்கம் , வெள்ளையம்மாள், முத்தாயி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் 'புரட்சி தமிழன்' சத்யராஜ், இயக்குநரும், நடிகருமான சேரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ்  ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை புரொடியூசர் பஜார் டாட் காம் மற்றும் 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்திர சூரியன் , பிரபு,  பெரியசாமி , ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளர்வோட்டத்திற்கு இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். 

இதில் ஒரு குடும்பமே திரைப்பட உருவாக்கத்திற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறது. இது சுவராசியமானதாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை விவரிக்கும்...

2025-07-10 16:58:52
news-image

கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்தின் டைட்டில்...

2025-07-10 16:58:36
news-image

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க...

2025-07-10 16:53:40
news-image

''நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டில்...

2025-07-09 18:34:55
news-image

சிவகார்த்திகேயனின் 'மதராசி'யுடன் மோதும் வெற்றி மாறனின்...

2025-07-09 18:19:56
news-image

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும்...

2025-07-09 18:19:30
news-image

கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2025-07-09 18:21:37
news-image

சினிமா என்பது அவதானிக்க இயலாத விளையாட்டு...

2025-07-09 18:14:24
news-image

இசையமைப்பாளருக்கு கைகடிகாரத்தை பரிசளித்த சரத்குமார்

2025-07-09 18:09:38
news-image

நடிகர் தமன் நடிக்கும் 'ஜென்ம நட்சத்திரம்'...

2025-07-09 17:59:35
news-image

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி...

2025-07-09 14:51:23
news-image

நடிகர் கே ஜே ஆர் நடிக்கும்...

2025-07-08 17:28:14