தினகரன் பத்திரிகை நிறுவனம் மற்றும் காவேரி கலாமன்றம் இணைந்து நடத்திய மாபெரும் இலக்கிய மற்றும் ஊடக விருது விழா சனிக்கிழமை (21) லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, ஊடக மற்றும் இலக்கிய ஆளுமைகள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ,சிறப்பு அதிதியாக தேசிய ஒருமைபாட்டு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் முனிர் முளப்பர், கெளரவ விருந்தினராக புரவலர் ஹாசிம் உமர் மன்றத்தின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் ,வீரகேசரி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி , எம் . செந்தில்நாதன், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜா ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழ் நாள் சாதனையாளர் விருதுகளை சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பெற்று கொண்டனர்.
விசேட வாழ் நாள் சாதனையாளர் விருதினை பேராசிரியர் துரை மனோகரன் பெற்று கொண்டார். ஊடகத்துறை வாழ் நாள் சாதனையாளர் விருதினை சாகித்திய ரத்னா அன்னலட்சுமி இராஜாதுரை பெற்று கொண்டார். தமிழ் ஊடகத்துறை வாழ் நாள் சாதனையாளர் விருதினை கலாபூஷணம் அல்ஹாஜ் எம்.ஏ.எம்.நிலாம் பெற்றுக்கொண்டார்.
ஊடகத்துறை வாழ் நாள் சாதனையாளர் விருதுகளை வீரகத்தி தனபாலசிங்கம் ,கலாபூஷணம் மீரா இஸ்ஸதீன் , இரா.அ.ராமன்,சட்டத்தரணி ரசீத் எம் .இம்தியாஸ், இ.சற்குருநாதன், டட்லி ஜான்ஸ் மற்றும் நந்தன வீரசிங்க ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு, ஊடகத்துறையில் சிறந்த பத்தி எழுத்தாளர் விருதினை மர்லின் மரிக்கார் பெற்றுக்கொண்டார். சிறந்த கட்டுரையாளர் விருதினை லோரன்ஸ் செல்வநாயகம் பெற்றுக்கொண்டார்.
சுகாதார மற்றும் சூழலியல் ஊடக விருதினை எம்.எச்.எப்.ஹுஸ்னா பெற்றுக்கொண்டதுன் தமிழ் இலக்கியத்துறை சிறந்த சிறுவர் பாடல் ஆசிரியர் விருதினை கவிஞர் இக்பால் அலி பெற்றுக்கொண்டார்.
தமிழ் இலக்கியத்துறை சிறந்த கவிஞர் விருதினை கவிஞர் ரீ.எல்.ஜவ்பர் கான்த பெற்றுக்கொண்டதுடன் ஒலி,ஒளிபரப்பு துறையில் பல தசாப்தகாலமாக சாதனைகள் பல நிகழ்த்தி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கும் முகமாக அவர் தற்போது கனடாவில் இருப்பதனால் அவரது சார்பில் வெ.தாமரைச்செல்வி பெற்றுக்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM