திடீரென பாரிய சத்தத்தையும் கண்ணாடிகள் நொருங்கும் சத்தத்தையும் கேட்டேன்- ஜேர்மனியின் கிறிஸ்மஸ் சந்தை கார் தாக்குதலை நேரில்பார்த்தவர்கள்

23 Dec, 2024 | 01:13 PM
image

bbc

ஜேர்மனியின் மக்டெபேர்க் கிறிஸ்மஸ் சந்தையில் பெருமளவில் திரண்டிருந்த மக்களை இலக்குவைத்து நபர் ஒருவர் தனது காரால் மோதிய தருணம் குறித்தும் அதன் பின்னர் அங்கு காணப்பட்ட நிலைமை குறித்தும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின்மக்டெபேர்க் சந்தையில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதிய தருணம் குறித்து 32 வயது பெண்ணொருவர் விபரித்துள்ளார்.

தனது ஆண் நண்பருடன் அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தவேளை கார் தங்களை நோக்கி வேகமாக வந்தது என அந்த நபர்தெரிவித்துள்ளார்.

அவரின் மீது கார் மோதியது எனது கரங்களில் இருந்து இழுத்துச்சென்றது  அது பயங்கரமான நிமிடம் என 32 வயது நடின் ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார்.

நடினின் ஆண் நண்பரிற்கு காலிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நான்; கிறிஸ்மஸ் கீதங்களை எனது சினேகிதியின் குடும்பத்தவர்களுடன்  செவிமடுத்துக்கொண்டிருந்தவேளை பாரிய சத்தமும் கண்ணாடிகள் சிதறும் சத்தமும் கேட்டது என கியானி வார்சேச்சா என்பவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

நான் மக்கள் பதற்றமடைவதை பார்த்தேன்,காரையும் மக்கள் இரத்தக்காயங்களுடன் வீழ்;ந்து கிடப்பதையும் பார்த்தேன் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் காயப்பட்டவர்களிற்கு முதலுதவியை வழங்குவதில் கவனம் செலுத்தினேன்,ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவிக்குழுக்கள் வந்துவிட்டன ஆனால் அது போதுமானதல்ல 200 பேர் வரை காயமடைந்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களிற்கு பொதுமக்களே அதிகளவில் முதலுதவியை வழங்கினார்கள் என அவர் பிபிசிக்குதெரிவித்துள்ளார்.

எங்கும் அம்புலன்ஸ்கள் காணப்பட்டன பொலிஸார் காணப்பட்டனர் தீயணைப்பு வீரர்கள் காணப்பட்டனர்,பெரும் குழப்பநிலை காணப்பட்டது நிலத்தில் இரத்தத்தை கண்டேன்,என எம்டிஆர் நிருபர் லார்ஸ் ப்ரோமுல்லர் தெரிவித்துள்ளார்.

பெரும் குழப்பநிலை காணப்பட்டது,நாங்கள் தரையில் இரத்தத்தை பார்த்தோம் மக்கள் ஒருவருக்கொருவர் சுற்றி அமர்ந்திருப்பதையும்,மருத்துவர்கள் முதலுதவி வழங்குவதையும்,நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது பெரும் அதிர்ச்சி மிகப்பெரும் அதிர்ச்சி  மக்டபேர்க்கிற்கும்  சக்சனி அன்ஹால்டில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32