(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அங்கு நடைபெற்ற தனது முதல் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியிலும் ஒரு ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றிபெற்றது.
லின்கன் பல்கலைக்கழகம், பேர்ட் சட்க்ளிவ் மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 13.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பெவன் ஜேக்கப்ஸ் 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்துவீச்சல் வனிந்து ஹசரங்க 2.3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் ஓய்வுபெற்றார். அவரது ஓவரில் எஞ்சிய 3 பந்துகளுடன் மேலும் ஒரு ஓவரை வீசிய கமிந்து மெண்டிஸ் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்கைக் கைப்பற்றினார்.
சரித் அசலன்க 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்று சுய ஓய்வு பெற்றனர். சரித் அசலன்க 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றி
இதே மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் பெத்தும் நிஸ்ஸன்க 31 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்க 25 ஓட்டங்களையும் பெற்று சுய ஓய்வு பெற்றனர். வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து பதினொருவர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மெத்யூ பொய்ல் தனி ஒருவராகப் போராடி ஆட்டம் இழக்காமல் 57 ஓட்ங்களைப் பெற்றார். ஜோ கார்ட்டர் 23 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நுவன் துஷார 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி, அங்கு நியூஸிலாந்துக்கு எதிராக 3 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதனைத் தொடர்ந்து 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM