அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகின. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக 4 நாட்கள் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் இம்மாதம் 04ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளன. இந்நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் ஜனவரி மாதம் 02ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM