தகு­திகாண் காலத்தில் திரு­மணம் முடிந்த கார­ணத்­தினால் வேலையில் இருந்து நீக்­கப்­பட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மீண்டும் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக நிய­மனம் பெற்ற திக­தியில் இருந்து மூன்று ஆண்­டுகள் தகு­திகாண் கால­மாகும். 

இந்த நிபந்­த­னை­யினால் வேலையை இழந்த உத்­தி­யோ­கத்­தர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு  விண்­ணப்பம் ஒன்றைச் செய்­தனர். இதன் பய­னா­கவே அவர்­க­ளுக்கு மீண்டும் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.  2 உப பொலிஸ் பரி­சோ­த­கர்­களும் 133 ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் 13 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இதில் அடங்குவர்.