பல பகுதிகளில் சுற்றிவளைப்பு - ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Published By: Digital Desk 2

22 Dec, 2024 | 05:40 PM
image

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் 03 சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபுத்கமுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது சைய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

இவரிடமிருந்து 817 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் கையடக்கத் தொலைப்பேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டர் ஏகநாயகவத்த நீர்கொழும்பு பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

இவரிடமிருந்து 07 கிராம் 530 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், அம்பலந்தோட்டை பொலிஸ் பிரிவில் நோனகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) கைது சைய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அம்பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

இவரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி, கந்தானை, அம்பலந்தோட்டை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

2025-02-13 17:39:48
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-13 16:25:44