கிண்ணியாவில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
அதன்படி, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் வேளாண்மை நிலங்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன.
இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளில் புல் அதிகமாக காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இதற்கான கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எங்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு பதிலாக வைக்கோல் மட்டுமே மிஞ்சு உள்ளது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு தர வேண்டும். அதேபோல் வேளாண்மையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஆனால், வேளாண்மை மூலம் பத்தாயிரம் ரூபா கூட வராது.
நாட்டில் அரிசியின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.
வேளாண்மை செய்யும் பகுதிகளை சுற்றி வெள்ளம் வராத அளவுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும். வௌ்ளம் காரணமாக 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM