எம்மில் சிலர் நடக்கும் போது சில அடிகள் தூரம் வரை நடந்து சென்று பிறகு சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிடுவர்.
அதன் பிறகு மேலும் சில அடிகள் தூரம் வரை நடந்து சென்று பிறகு கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் தாங்க இயலாத வலியின் காரணமாக சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிடுவர்.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் அயோர்டோபிஃபெமரல் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலின் எனும் நவீன சத்திர சிகிச்சையை செய்து நிவாரணம் வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதயத்திலிருந்து பாதம் வரை செல்லும் முதன்மையான ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் கெண்டைக் காலில் வலி ஏற்படும். மேலும் இவர்களால் சிறிது தொலைவு தூரம் வரை நடப்பதற்கு சிரமப்படுவார்கள்.
முதலில் சில அடிகள் தூரம் வரை நடப்பர். பிறகு வலி எடுக்கும். பிறகு ஓய்வாக அமர்ந்திருக்கும் போதும் காலில் வலி எடுக்கும். இது அவர்களின் நாளாந்த வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கிறது.
புகைப்பிடித்தல், ரத்தக்கொதிப்பு, உயர் கொழுப்பு ,இதய பாதிப்பு, உடற்பருமன் ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
நடக்கும்போது கெண்டைக் காலில் வலி ஏற்பட்டால்.. அதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றால்.. பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம். ஆனால் மக்கள் வலியை பொறுத்துக் கொண்டு பாதிப்பினை தீவிரப்படுத்திக்கொள்கிறார்கள்.
இதன் காரணமாக அவர்களுக்கு தொடக்க நிலையை கடந்து மிதமான நிலை பாதிப்பிற்கு ஆளாகும் போது வைத்தியர்களை சந்திக்கிறார்கள்.
வைத்தியர்கள் இதன் போது அவர்களுக்கு ரத்த நாளங்களில் ஓஞ்சியோபிளாஸ்ரி எனும் பிரத்யேக சத்திர சிகிச்சை செய்து நிவாரணம் அளிக்கிறார்கள்.
மேலும் சிலர் இந்த தருணத்தையும் கடந்து நடக்கவே இயலாத நிலையில் இருக்கும் போது வைத்தியர்களை நாடுகிறார்கள்.
இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் அவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட பாலிடெட்ராஃப்ளூரோ எத்திலின் எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
- வைத்தியர் சரவணன்,
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM