நாம் எப்போதும் ஒருவரை சந்திக்கும்போது.. அவர் எந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, எம்மை எதிர்கொண்டு இன்முகத்துடன் வரவேற்று பேசுவதில் தான் எமக்கான மரியாதையும், அங்கீகாரமும் உள்ளது.
ஆனால் இது எல்லோருக்கும்... எல்லா தருணத்திலும் சாத்தியமாவதில்லை. ஏனெனில் எம்மிடம் உள்ள கணக்கற்ற எதிர்மறை ஆற்றல்களின் காரணமாக எதிராளிகளை அல்லது உங்களுடைய விருப்பத்திற்குரிய நபர்களை ஆர்வத்துடன் சந்திக்கச் சென்றாலும்... அவர்கள் உங்களை ஆர்வமின்றியே எதிர்கொள்வார்கள்.
இதன் காரணமாக உங்களுடைய சந்திப்புகள் பல தருணங்களில் எதிர்பார்த்த பலனை தராமல், அசுப பலன்களையே வழங்கும். சிலருக்கு இதன் பின்னணியில் உள்ள சூட்சமங்கள் தெரியாமல் தொடர்ந்து முயன்று தோல்வியையே சந்திப்பார்கள்.
இந்த தருணத்தில் எம்முடைய முன்னோர்கள் உங்களிடையே மறைந்திருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர் நிலையான அதிர்வுகளுடன் கூடிய ஆற்றலை பெறுவதற்கான சூட்சம வழிமுறைகளை விவரித்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் :ஒரு கிலோ கல் உப்பு - ஒரு லிற்றர் நீர் - ஒரு வாயகன்ற கோப்பை - சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடி.
நேர் நிலையான அதிர்வுகளுடன் கூடிய ஆற்றலை பெற விரும்புபவர்கள் நாளாந்தம் இரவு உறங்குவதற்கு முன் உங்களுடைய படுக்கைக்கு அருகில் ஒரு வாய் அகன்ற கோப்பையில் ஒரு கிலோ கல் உப்பையும், ஒரு லிற்றர் நீரையும் இட்டு, அதனை கைகளால் கலக்கவும். அந்த உப்பு நீரை உங்களுடைய பாதத்திற்கு அருகிலோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொண்டு உறங்கி விட வேண்டும்.
காலையில் எழுந்ததும் உங்களுடைய பாதம் பூமியில் படாதவாறு எழுந்து, அந்த உப்புத் தண்ணீரில் உங்கள் காலை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் சென்ற பிறகு அந்த நீர் நிறம் மாறுவதை காணுங்கள்.
அதன் பிறகு அந்த நீரை உங்களுடைய கழிவறையில் ஊற்றி விடுங்கள். அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடியினை உடலில் பூசிக்கொண்டு நீராடுங்கள்.
இப்படி நீங்கள் நாளாந்த மேற்கொள்ளும்போது உங்களையும் அறியாமல் உங்களை ஆக்கிரமித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அகன்று ஓடி, அதே தருணத்தில் நேர் நிலையான அதிர்வுகளுடன் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
இந்த நீராடலுக்கு பிறகு நீங்கள் யாரை சந்தித்தாலும்.. உங்களுடைய சந்திப்பு பலன் உள்ளதாகவும், பயன் தரத்தக்கதாகவும் மாற்றம் பெறுவதை அனுபவத்தில் காண்பீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM