வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகிறதா அரசாங்கம்? - நோர்வே தூதுவருக்கு தமிழரசுக் கட்சி விளக்கம்

21 Dec, 2024 | 06:09 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதில் அரசாங்கம் பின்வாங்குவது போல் தென்படுவதாக இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் நோர்வே நாட்டுத் தூதுவர் மே-எலின் ஸ்ரெனரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்ரெனருக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (21) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியிருக்கும் நிலையில், அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன? ஏதேனும் முன்னேற்றகரமான நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றனவா? என நோர்வே தூதுவர் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் இன்னமும் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன், இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துதல் என்பன தொடர்பில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தற்போது அரசாங்கம் பின்வாங்குவது போல் தென்படுவதாகவும், அவற்றுக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதப்படுத்துவதாகவும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்ரெனரிடம் எடுத்துரைத்தனர்.

இருப்பினும், புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி சில வாரங்களே கடந்திருப்பதனால், அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக ஒரு மதிப்பீட்டுக்கு வருவது கடினம் என மே-எலின் ஸ்ரெனரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே அவர்களது நகர்வுகள் குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்திவருவதாக குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36
news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 21:26:25
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50