அநுரவின் தலைமையில் நாடு சரியான பொருளாதார திசையில் பயணிக்கிறது - பிரித்தானிய உயர்ஸ்தானிகர் 

21 Dec, 2024 | 04:09 PM
image

(ஆர்.ராம்)

னாதிபதி அநுரவின் தலைமையில் நாடு சரியான பொருளாதார திசையில் சென்று கொண்டிருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்காக பிரித்தானிய வணிகத் தலைவர்கள் குழு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறினார்.

நிதி அமைச்சில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடினார்.

அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் மேற்கொண்ட விரைவான முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும், எதிர்கால முன்னெடுப்புக்கள் குறித்தும் பிரதி அமைச்சர் சூரியப்பெரும தெளிவுபடுத்தினார்.

இலங்கை பொருட்களின் ஏற்றுமதியை, குறிப்பாக சேதன விவசாயப் பொருட்கள், ஆடைகள், இயற்கை அழகு சாதனப் பொருட்களை பிரித்தானிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக உயிர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச இறையாண்மை கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதில் இலங்கையின் முயற்சிகளையும், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை திறம்பட செயற்படுத்துவதையும் உயர்ஸ்தானிகர் வெகுவாக பாராட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24