சென்னையில் நடைபெற்ற 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகருக்கான விருது 'மகாராஜா' படத்தில் நடித்ததற்காக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை தமிழக அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இதில்,
சிறந்த நடிகருக்கான விருது - விஜய் சேதுபதி (மகாராஜா)
சிறந்த நடிகைக்கான விருது - சாய் பல்லவி (அமரன்)
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது- சி ஹெச் சாய் (அமரன்)
சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது - பிலோமின் ராஜ் ( மகாராஜா) சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது சுரேன் ஜி- அழகிய கூத்தன் (கொட்டுக்காளி)
சிறந்த திரைப்படத்திற்கான விருது- அமரன்
சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது விருது - லப்பர் பந்து நடுவர்களின் விசேட விருது - ஜமா.
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன். வேல் (வாழை)
சிறந்த துணை நடிகர்- தினேஷ் (லப்பர் பந்து)
சிறந்த துணை நடிகை - துஷாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த கதாசிரியர் - நித்திலன் சாமிநாதன் (மகாராஜா)
சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த கலை இயக்குநர் - எஸ். எஸ். மூர்த்தி (தங்கலான்)
சிறந்த சமூக திரைப்படம்- நந்தன்
சிறந்த திரைப்படம் சிறப்பு விருது - வாழை
சிறந்த திரைப்படம் சிறப்பு விருது - தங்கலான்
சிறந்த பிரபல நடிகருக்கான விருது - அரவிந்த்சாமி (மெய்யழகன்)
சிறந்த பிரபல நடிகைக்கான விருது- அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த படத்திற்கான நடுவர் விருது- கோழி பண்ணை செல்லத்துரை
சிறந்த பிரபல நடிகருக்கான நடுவர் விருது - யோகி பாபு (போட் மற்றும் கோழிப்பண்ணை செல்லத்துரை)
அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது- அருள்நிதி
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருது - வேட்டையன்
சிறந்த நம்பிக்கை நட்சத்திர நடிகர் விருது - அர்ஜுன் தாஸ்
இந்த பட்டியலில் இடம் பிடித்த அனைத்து நட்சத்திர கலைஞர்களுக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்வின்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM