மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் ரி 56 ரக துப்பாக்கியுடன் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14 ஆம் திகதி காரில் பயணித்த நபர் ஒருவர் மீது மோட்டார் முச்சக்கர வண்டியில் வருகை தந்திருந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்திருந்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மீகொட புவக்வத்தை வீதியில் வைத்து குற்றச் செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மேலும் ஒரு சந்தேகநபர் தொடர்பில் தகவலறியக் கிடைத்துள்ளது. அதற்கமைய மேற்படி குற்றச் செயலுக்கு உதவிய சந்தேகநபர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர்கள் இருவரும் 27 மற்றும் 29 வயதுடைய பாதுக்க மற்றும் மீகொட பகுதியை சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபர் இராணுவத்திலிருந்து விலகியவர் என தெரியவந்துள்ளது. குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரி 56 ரக துப்பாக்கி, 26 ரவைகள் மற்றும் ஒரு தோட்டா ஆகியன சந்தேகநபரால் குழித்தோண்டி புதைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்குடன் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது. இதேவேளை சந்தேகநபர்கள் தொடர்பில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும், மீகொட பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடையவர்களாவர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM