வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரட்டைபெரியகுளம் கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல (33) என்ற நபரே நேற்று (19) இரவு அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.