கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் கந்தகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியிலிருந்து பயணித்த பாரவூர்தியொன்றுடன், எதிர் திசையில் வந்த பாரவூர்தி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 19 மற்றும் 27 வயதான இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.