வீடொன்றின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு ; களுத்துறையில் சம்பவம்

20 Dec, 2024 | 05:21 PM
image

களுத்துறை , மீகஹதென்ன, லிஹினியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 04 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

லிஹினியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் தங்க நகைகளைக் கழற்றி வைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 

வெளியே சென்ற பெண்  மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதையும் அவதானித்துள்ளார்.

பின்னர் இந்த பெண் இது தொடர்பில்  மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். 

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05