(எம்.வை.எம்.சியாம்)
எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதில் கொழும்பை மையப்படுத்தி மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புது வருட பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட பொது இடங்களில் அதிகம் ஒன்று கூடுவர்.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதில் கொழும்பை மையப்படுத்தி மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுவர்.
இவர்களுள் 553 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதோடு, 600 பேர் போக்குவரத்து கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் 500 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுவர். அத்துடன் புலனாய்வு பிரிவின் 48 உயர் அதிகாரிகள் மற்றும் அந்த திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 769 பேரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகம் இடம் பெறலாம். எனவே பொதுமக்கள் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
அத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொள்ளும் தரப்பினர் மற்றும் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM