காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல்

Published By: Digital Desk 7

20 Dec, 2024 | 12:58 PM
image

காலநிலை மாற்றங்கள் என்பது தேசத்தின் எல்லைகளை மதிக்காத உலகளாவிய சவாலாக அமைவதோடு, இது தற்போது அனைத்துக் கண்டங்களையும்சேர்ந்த நாடுகளைப் பாதிக்கின்றது. எந்தவோர் இடத்திலும் இடம்பெறுகின்ற உமிழ்வு எல்லாஇடத்திலும் இருக்கின்ற மனிதர்களை பாதிக்கின்றது,  காலநிலைப் போக்குகள் மாற்றமடைகின்றமை, கடல்மட்டம் உயர்வடைகின்றமை, சமுத்திர அமிலமயமாக்கம் மற்றும் மிகுந்த விளிம்புநிலை வானிலை நிகழ்வுகள் இயற்கையை பாதிப்பதோடு  உயிரினங்களினதும் வாழிடங்களினதும் சீரழிவுக்கு காரணமாக அமைவதோடு அவை ஏற்கெனவே மானிட வாழ்வாதாரங்களையும் இழக்கச்செய்வித்துள்ளது.   

காலநிலை மாற்றங்களின் பலதரப்பட்ட தோற்றப்பாடுகள் 

இந்த தாக்கங்களுக்கான உதாரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  • வெப்பநிலை உயர்வடைதல்.
  • மழைவீழ்ச்சிப் போக்குகள் மாற்றமடைதல்.
  • கடல்மட்டம் உயர்வடைதல். 
  • பனிப்பாறைகளும் துருவப் பனித்தட்டுகளும் கரைதல். 
  • சமுத்திர அமிலமயமாதல்.
  • சூழற்றொகுதிகள் மற்றும்  உயிர்ப்பன்வகைமை மீதான தாக்கம்.
  • மழைவீழ்ச்சியிலும் பருவகாலங்களிலுமான மாற்றம்.
  • காற்று மற்றும் சமுத்திர சுற்றோட்டம் மாற்றமடைதல்.  

உங்களுக்குத் தெரியுமா?

1800 ஆம் ஆண்டளவில் இருந்து காலநிலை மாற்றங்களுக்கு பிரதானமான பங்களிப்பினை செய்கின்ற காரணியாக மானிட செயற்பாடுகளே அமைந்துள்ளன. மானிட செயற்பாடுகளிலான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு இடையறாமல் உயர்வடைந்து தற்போது மானிட வரலாற்றின் உச்ச மட்டத்தை அடைந்துள்ளது. 

உணவு, நீர், சுகாதாரம், சூழற்றொகுதிச் சேவை, மானிட வாழிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய ஆறுவகையான  வாழ்க்கை உதவிப் பிரிவுகளை கருத்திற்கொள்வதன் மூலமாக  காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்கான நாடொன்றின் திறந்தநிலையும் கூருணர்வும் அளக்கப்படுகின்றது.  

காலநிலை மாற்றங்களும் புவி வெப்பநிலையும் 

காலநிலை மாற்றங்களும் புவி வெப்பநிலையும் ஒன்றுடனொன்று தொடர்புபடுகின்றபோதிலும் ஒரே விடயமாகக் கருதப்படுவதில்லை. மானிட செயற்பாடுகள் காரணமாக புவியின் சராசரி மேற்பரப்பு வளிமண்டல வெப்பநிலை நீண்டகாலரீதியில் அதிகரிப்பதே புவி வெப்பநிலை  உயர்வடைதல் என திட்டவட்டமாக கருதப்படுகின்றது. 

பனிப்பாறைகள் உருகுதல் மிகஅதிகமாக இடம்பெறுகின்ற இடங்கள்

2002 ஆம் ஆண்டிலிருந்து அந்தாடிக்காவிலும் கிறீன்லாந்திலும் நிலப்பரப்பில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைத் தட்டுகள் உருகிவருதோடு அவை படிப்படியாக கரைந்து நீராக சமுத்திரங்களை நோக்கி பாய்ந்து வருதல் உலகளாவிய கடல் மட்டம்  உயர்வடைய காரணமாக அமைந்துள்ளது.  இந்த இரண்டு பிரதேசங்களிலும் உள்ள பிரமாண்டமான பனிப்பாறைத் தட்டுகளில் பாரியளவிலான நன்னீர் பொதிந்துள்ளது. அது அண்ணளவாக புவியில் உள்ள முழுமையான நன்னீரைப்போல் ஏறக்குறைய மூன்றிலிரண்டு பங்காகும். எவ்வாறாயினும் புவி வெப்பநிலை உயர்வடைவதன் காரணமாக இந்த ஐஸ் தட்டுகள் அனைத்தும் உருகிவருகின்றன. அந்தாட்டிக்கா ஆண்டுக்கு சராசரியாக 150 பில்லியன் தொன் பனிப்பாறைகளை இழந்து வருவதோடு கிறீன்லாந்து ஆண்டுக்கு ஏறக்குறைய 270 பில்லியன் தொன் பனிப்பாறைகளை இழந்து வருகின்றது.

இலங்கையில் காலநிலை மாற்றங்களின் தாக்கம் 

காலநிலை மாற்றங்கள் இலங்கைமீது கணிசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. வெப்பநிலை உயர்வடைதல், மழைவீழ்ச்சிப்போக்கு மாற்றமடைதல், கடல்மட்டம் உயர்வடைதல் அத்துடன்  அடிக்கடி இடம்பெறுகின்ற பயங்கரமான வானிலை நிலைமைகள்  போன்ற பல்வேறு வடிவங்களில் அது காட்சியளிக்கிறது,  இலங்கையில் மாதாந்தம் மிகச்சிறிய மாறிகளைக் கொண்டதாக சராசரியாக 270 - 280  உயர்பெறுமானம் கொண்டதாக சராசரி வெப்பநிலையை அனுபவித்து வந்தபோதிலும்  1961 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை ஆண்டுக்கு 0.0160 மற்றும் 1990 தொடக்கம் 2018 ஆம் ஆண்டுவரை ஆண்டுக்கு 0.0360 ஆல் வெப்பநிலை அதிகரிக்கின்ற பாங்கினை அனுபவித்துள்ளது. மேலும் மழைவீழ்ச்சிப் பாங்குகளில் சிக்கலான மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதோடு 1961 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை வருடமொன்றுக்கு எறக்குறைய 7 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியையும்  1991 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரை  ஆண்டுக்கு 3.5 மில்லிமீற்றர் வரையான வருடாந்த மழைவீழ்ச்சியின் குறைந்துசெல்கின்ற போக்கு நிலவுகின்றது. 

இதற்கு மேலதிகமாக மோசமான வானிலை நிலைமைகளின் பெறுபேறாக மக்கள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் அழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நீண்டகால வறட்சி, திடீர் வெள்ளப்பெருக்கு  மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஏற்படுகின்றன. உலக காலநிலை அபாயநேர்வு குறிகாட்டியில் மிகுந்த அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடிய ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளதோடு 2016 ஆம் ஆண்டில் அந்த குறிகாட்டியில் 4 வது இடத்தையும்  2017 ஆண்டில்  அந்த குறிகாட்டியில் 6 வது இடத்தையும் இலங்கை வகித்தது.  1990 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஏறக்குறைய 74% வானிலை மாற்றங்களால் ஏற்பட்டவையாக அமைந்ததோடு  அதில் வெள்ளப்பெருக்கு (58%), நிலச்சரிவுகள் (7%), புயல்கள் (5%),  வறட்சி (4%) ஆக அமைந்திருந்தது. 

மாற்றங்களை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் உங்களிடம் இருக்கிறது!

தூய்மையான மற்றும் மிகவும் தாக்குப்பிடிக்கக்கூடிய பொருளாதாரத்தை நோக்கி இடம்பெயர நாடுகளை முனைப்பானவையாக்க கட்டுப்படியான, அளவுசார்ரீதியான தீர்வுகள் தற்போது இருக்கின்றன. புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை நோக்கி அதிகமானோர் கவனஞ்செலுத்தி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வேறு மாற்றங்களைச் செய்துவருவதால் அது உமிழ்வினைக் குறைக்கவும் சமூகங்கள் மிகவும் நன்றாக ஏற்பிசைவுசெய்யவும்  உதவுவதாக அமையும்.  

உங்களின் காபன் தடத்தினை குறைப்பதற்கான ஆக்கமுறையான வழிமுறைகள் 

வலுச்சக்தி சேமிப்பினை வீட்டிலிருந்தே தொடங்குக. 

வெப்பமேற்றல் மற்றும் குளிரூட்டலுக்காக பாவிக்கின்ற வளிச்சீராக்கிப் பாவனையைக் குறைத்தல். 

LED மின் குமிழ்கள் மற்றும் வினைத்திறன்மிக்க வலுச்சக்தி சாதனங்களை பாவிக்கவும். 

உலர்த்தியை (Dryer) பாவிப்பதற்குப் பதிலாக உடைகளை வளியில் காயவைப்பதற்காக தொங்கவிடுக. 

சாதனங்களை பாவிக்காதவேளையில் செயலிழக்கச்செய்வித்து துண்டித்துவிடுக.  

நடந்து செல்லுதல், சைக்கிள் பிரயாணம் இல்லையேல் பொதுப் போக்குவரத்தினை பாவிக்கவும்.

குறிப்பாக வெகுதூரம் பயணிப்பதாயின் பொதுப் போக்குவரத்து அல்லது குறுகிய பயணத்திற்கு நடத்தல், பைசிக்களில் செல்லல் போன்ற உங்கள் மோட்டார்  வாகனத்திற்கான மாற்றுவழிகள் மீது கவனஞ்செலுத்துக. 

அதிகமாக காய்கறிகளை உணவாகக் கொள்க. 

தாவரங்களை அடிப்படையாகக்கொண்ட உணவு பொதுவாக விலங்கு உற்பத்திகளைவிட குறைந்த காபன் தடத்தை கொண்டுள்ளமையால் உங்கள் சாப்பாட்டு வேளையில்  அடிக்கடி காய்கறிகள், பழங்கள், தானியவகைகள், அவரையினப் பயிர்கள், விதையினங்களை சேர்த்துக்கொள்ளக.   

நீங்கள் விஜயம்செய்கின்ற விதம் பற்றி கருத்திற்கொள்க.

விமானப் பயணங்களை குறைத்துக்கொள்க. (உங்கள் காபன் பாதச்சுவடுகளை குறைப்பதற்கான வேகமான வழிமுறை) 

உங்கள் பணிகளுக்கு மனிதர்களை சந்திப்பது அடங்குமாயின், அதற்குப் பதிலாக, மெய்நிகர், இணைய இணைப்புக் கூட்டங்களை நடாத்துகின்ற மாற்றுவழி பற்றி கவனத்திற்கொள்க.⁄

உணவு விரயத்தைக் குறைக்கவும்

உணவுக் கழிவுப்பொருட்கள் உக்கிப்போகும்போது பச்சை வீட்டு வாயு உமிழ்விற்கு பங்களிப்புச் செய்கிறது.

நீங்கள் கொள்வனவு செய்தவற்றை பாவிக்கவும், எஞ்சியுள்ளதை கூட்டுப் பசளையாக்குக.

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மிகையாக பொதிசெய்யப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்தல் பற்றிக் கவனஞ் செலுத்துக. 

குறைத்தல், மீள்பாவனை செய்தல், புதப்பித்தல் மற்றும் மீள்சுழற்சிசெய்தல்.

உங்களுக்கு தேவையானவற்றைக் கொள்வனவு செய்க.

மாற்றுப் பண்டங்களை கொள்வனவுசெய்க.

உங்களால் முடிந்தவற்றை பழுதுபார்த்து  மீள்சுழற்சி செய்க. 

உங்கள் வீட்டின் வலுச்சக்தி மூலத்தை மாற்றியமைத்திடுக.

இயலுமானவரை மீளப்புதுப்பிக்கத்ததக்க வலுச்சக்தி  மூலங்களுக்கு மாறுவதன் ஊடாக உங்களின் காபன் பாதச்சுவட்டினை  கணிசமான அளவில் குறைத்துக்கொள்ள முடியும்.

வீட்டில் சுத்தமான வலுச்சக்தியை பிறப்பிப்பதற்காக  உங்கள் கூரைமீது  சூரியக் கலங்களை பொருத்துதல் பற்றி கவனஞ் செலுத்துக.  

இலத்திரனியல் வாகனத்திற்கு மாறுங்கள்

நீங்கள் அடுத்ததாக மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவுசெய்ய திட்டமிடும்போது மின்சார வாகனமொன்றை கொள்வனவு செய்வது பற்றி   கவனஞ் செலுத்துக. 

புவியன்னையைப் பாதுகாத்தலும் பொதுமக்களின் பொறுப்பும்

நாமனைவரும் நீர்வளம், வலுச்சக்தி போன்றே ஏனைய  வளங்களின் சிக்கனமான பாவனைக்கும் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையைத் தவிர்த்தல் மற்றும் குறைந்தபட்ச பாவனைக்கு பழக்கிக்கொள்வதும், தடைசெய்யப்பட்ட பொலீத்தீன் தயாரிப்புகளை தவிர்த்துக்கொள்ளவும், மீள்சுழற்சியாக்கத்திற்கு பங்களித்து  முறைசார்ந்த குப்பைகூள முகாமைத்துவத்தின்பால் பிரவேசிப்பபதும்  அத்தியாவசியமானதாகும். 

இயற்கை விவசாய காய்கறிகள், பழவகைகளின் பாவனையைப் போன்றே சுகாதாரப் பாதுகாப்புமிக்க உணவுப் பாங்குகளை பழகிக்கொள்வதும்  சுகாதாரரீதியில் மிகவும் அவசியமானதாகும். 

இயலுமான எல்லா இடங்களிலும் மரநடுகை செய்வதையும் மரஞ்செடிகொடிகளின் அழிவினைத் தடுப்பதையும் உணவு,  நீர் மற்றும் மின்சாரம் விரயமாவதை தடுப்பதையும் உள்ளிட்ட பசுமை மானிட செயற்பாட்டில் பிரவேசிப்பதும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க நிலைபெறுதகு வாழ்க்கை வழியுரிமைக்கு  அத்தியாவசியமானதாகும்.

எமது புவியன்னை நாம் வசிப்பதற்குள்ள வீடாக அமைவதால் அதனைப் பாதுகாத்து சுற்றாடல் பாதுகாப்பு என்பது எமது வாழ்க்கை என்பதை விவேகமுள்ளவர்களாக விளங்கிக் கொண்டு இயற்கையோடு ஒன்றிய தாக்குப்பிடிக்கக்கூடிய நிலைபெறுதகு வாழ்க்கை கோட்பாட்டினை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

அதனால் மதம் சார்ந்த, இனம் சார்ந்த மற்றும் அரசியல் ரீதியான குறுகிய பிளவுகளின்றி உலகளாவிய மனித சமூகத்தை பிரபஞ்ச குடும்பமொன்றின் அங்கத்தவர்கள் என்ற வகையில் "காலநிலை நீதி" (Climate Justice) என்பதற்காக கூட்டாக அணிதிரவேண்டிய முதன்மை தேவை தோன்றியிருக்கிறது.

அதனால் இன்றைய நாளில் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு செயலாற்ற வேண்டியதாக அமைவது புவிமேற்பரப்பின் மீது ஓர் உயிரினமாக தோன்றி வழியுரிமைகொண்டாட இயலுமானதாக அமையும் பொருட்டு புனிதமான புவியன்னைக்கு மரியாதை செலுத்துவதும் நியாயத்தை ஈடேற்றி புவியன்னைக்கு சுகம் தேடி தருவதற்காக எம்மை அர்ப்பணிப்பதுமாகும். 

ஷியாமணி பெரியப்பெரும 
பணிப்பாளர் சுற்றாடல் மேம்பாடு அலகு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right